தமிழில் "இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கப்படாத போர் குற்றங்கள்"
சேனல் 4 வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்" தமிழில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் இன்று (16.03.2012) தாயக நேரம் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தொலைக்காட்சியினை காண இங்கே அழுத்தவும்>>
மதுரையில் சோனியாகாந்தியின் உருவப்பொம்மையை எரித்த வழக்குரைஞர்கள்
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மேலும் »
ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரி பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்: தமிழக இளைஞர் காங்கிரஸ்
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருக்கு இளைஞர் காங்கிரசார் ஈரோட்டில் இருந்து தந்தி கொடுத்தனர். மேலும் »
இந்திய மத்திய அரசுக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அரசு கொண்டு வந்த போர்க்குற்ற எதிர்ப்பு தீர்மான நடவடிக்கையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (16.03.2012) மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும் »
லெப்.கேணல் ரவி வீரவணக்க நாள்
வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் மேலும் »
3 அகவை குழந்தையை நரபலி கொடுக்க மகிந்த திட்டம்…?
மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் 'மனித பலி" கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் »
போர்க்குற்றங்களைச் செய்யும் உரிமை சிறிலங்கா அரசுக்கு இல்லை – சனல் 4 ஆவணப்படத்தில் மில்லிபான்ட்
போர்க்குற்றங்களை செய்வதற்கு சட்டபூர்வமாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மல்லிபான்ட் தெரிவித்துள்ளார். மேலும் »
நம்பகமான – சுதந்திரமான விசாரணைக்கு பிரித்தானியா மீண்டும் அழைப்பு
சனல்4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம் வெளியாகிய பின்னர், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் »
ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும் – ஹோம்ஸ்
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புகூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காணமுடியும் என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் ஐ.நா உதவிச்செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் »
படைமுகாமாக மாறிய முள்ளியவளை புதரிக்குடா மாவீரர் துயிலுமில்லம்
இடித்தகற்றப்பட்ட முள்ளியவளை புதரிக்குடா மாவீரர் துயிலுமில்லம் இருந்த இடத்தில் பாரிய படைமுகாம் ஒன்றினை அமைக்கும் செயற்பாட்டில் சிறிலங்கா படையினர் முனைப்புடன் செயற்பாட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
சனல் 4 மற்றும் சா்வதேச விசாரணை – த.தே.ம.மு ஊடக அறிக்கை
சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் தவிர்க்க முடியாத அவசியத்தை வலியுறுத்தும் சனல் – 4ன் ஆதாரங்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைத் தீவு தொடர்பான அக்கறை கூர்மையடைந்துள்ள காலகட்டத்தில், அமெரிக்காவின் தலைமையில் இலங்கை தொடர்பான பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே. மேலும் »
போருக்குப் பிந்தைய ஈழத் தமிழர் நிலைமை… நெஞ்சை பிழியும் கொடூரம்!
தேசியத்தலைவர் பிரபாகரனின் 12வயது மகனான பாலசந்திரனை சுட்டுக் கொன்ற வீடியோ ஆதாரத்தை 'சனல் 4′ வெளியிட்டதை அடுத்து ஈழத்தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஷயம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. மேலும் »
ஞானதேசிகனுக்கு சோனியா கடும் உத்தரவு! – வினோத்
தமிழ் நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மத்திய அரசின் போக்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது மக்கள் இயக்கமாக மாறும் தறுவாயில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் தூண்டுதல் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்தது நினைவிருக்கலாம். மேலும் »
குற்றவாளிகளிடமே நீதியின் விசாரணை! தீர்வு எவ்வாறு கிடைக்கும்?
ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத் தொடரில் சிறீலங்கா தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானம், அந்நாட்டைக் கண்டிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டதல்ல என்றும் இந்த விவகாரம் குறித்து எல்லாப் பிராந்தியங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளையடுத்துப் பயனுள்ள பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன. மேலும் »
"இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கபடாத போர் குற்றங்கள்" – புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
சேனல் 4 வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கபடாத போர் குற்றங்கள்" புதியதலைமுறை தொலைக்காட்சியில் இன்று (15.03.2012) தாயக நேரம் இரவு 10.00 மணிக்கு காணொளி ஒளிபரப்பாகிறது. நாளை (16.03.2012) இரவு தமிழில் "இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கபடாத போர் குற்றங்கள்" சேனல் 4 நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காணலாம்… தொலைக்காட்சியினை காண இங்கே அழுத்தவும்…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் பட்டினிப்போர்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் 48 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். மேலும் »
இராமேசுவர மீனவர்கள் மீது குண்டுவீசிய சிங்கள அரச பயங்கரவாத கடற்படை
ராமேசுவரத்தில் இருந்து (14/03/2012) 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திþகும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே ஆறுமுகம் உள்பட 4 பேர் ஒரு படகில் இருந்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். இரவு 10 மணி அளவில் பிளாஸ்டிக் படகில் வந்த இலங்கை கடற்படையினர் இங்கு ஏன் வந்தீர்கள் என்று கூறி அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். மேலும் »
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் இனக்கலவரம் வரும் என்ற சம்பிக்கவின் கருத்து பாரதூரமானது – மனோ கணேசன்
உத்தேச ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றதை போல ஒரு இனக்கலவரம் வரலாம் என்று, தமிழ் மக்களை பயமுறுத்தும் தொனியில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்து இருப்பது பாரதூரமானது. மேலும் »
தமிழக எம்.பிக்களை தரக்குறைவாக விமர்சித்த இலங்கை தூதர் மன்னிப்பு கேட்டார்!
தமிழக எம்.பிக்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமிராகப் பேசிய இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை இன்று மத்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தனது பேச்சுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மேலும் »
இந்தியப்பிரதமரின் உருவப்பொம்மை எரித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கைது
தூத்துக்குடியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை எரித்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment