Friday, April 30, 2010

நேரலை: மதுரையிலிருந்து இயக்குநர் சீமான்

நேரலை: மதுரையிலிருந்து இயக்குநர் சீமான்

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கூட்டம் இப்பொழுது நமது மீனகத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது…

http://meenakam.com/

நேரலை அறிவிப்பு: மே 01 தாயக நேரப்படி காலை 10 மணி

நேரலை அறிவிப்பு: மே 01 தாயக நேரப்படி காலை 10 மணி

எதிர்வரும் மே 18 ஆம் திகதி நாம் தமிழர் அரசியல் கட்சி அறிவிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்புக்கூட்டம் மே 1 ஆம் திகதி நடைபெறுகிறது. நாம் தமிழர் இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் பங்குபெறுகிறார். மேலும் »

ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் உள்விவகாரங்களில் கட்டளையிடவில்லை -செவாக்

ஐரோப்பிய ஒன்றியம் அவசரகாலசட்டம் இன்னமும் அமுலில் இருப்பது தொடர்பிலும் சரத்பொன்சேகா அவர்கள் இராணுவ தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் தமது கவலையை வெளியிட்டுள்ளது. மேலும் »

யாழில் மீண்டும் படையினரது நடமாட்டம் அதிகரிப்பு

கடந்த வருடம் வன்னியில் சிறீலங்கா அரசு பல சர்வதேச உதவிகளுடன் மேற்கொண்ட போர் முடிவுக்கு வந்த பின்னர் சற்று குறைந்து இருந்த படையினரது நடமாட்டம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் »

5000 ரூபாயுடன் வன்னி மக்களை குடியேற்றும் சிறிலங்கா

வன்னியில் சிறீலங்கா கொடுத்த இன அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு போரினால் இடம்பெயர்ந்து தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு கடும் சோதனைகள் விசாரணைகளுக்கு பின்னர் குடியேற்றப்படும் மக்கள் தொடர்ந்தும் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக வன்னியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி த.தே.கூவிற்கு இந்தியா அழுத்தம்

சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்தவிற்கு இந்த ஆதரவை வழங்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

மாமனிதர் "தராகி" சிவராமின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் லண்டனில் நடைபெற்றது

மாமனிதர் "தராகி" சிவராமின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு "தமிழர் சட்ட ஆலோசனைக் குழு" ஏற்பாட்டில் நேற்றிரவு லண்டனில் நடைபெற்றது. மேலும் »

"சிங்களமயமாக்கலில் தாய்மண்ணைக் காப்போம்" எச்சரிக்கை – யாழில் துண்டுப்பிரசுரம்

வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் »

போர் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும் -அரசியல் ஆய்வாளர் – க.வீமன்

போர் மரபுகளை மீறியதற்காகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததற்காகவும் இன அழிப்பில் ஈடுபட்டதற்காகவும் அப்பாவிப் பொது மக்களின் குறிப்பாகப் பெண்கள் குழந்தைகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தவறியதற்காகவும் சிறிலங்கா தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் சர்வதேச மட்டத்தில் வலுத்து வருகிறது. மேலும் »

மலேசியாவில் தமிழ் வர்த்தகர் சிறீலங்காவிற்கு நாடுகடத்தல்

நோர்வே, ஜெர்மனி, சுவிட்சாலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் மலேசியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். மேலும் »

ஆசிய பசுபிக் பசுமை வலையமைப்பு நாடுகளின் மாநாடு இன்று தாய்வானில்

ஆசிய பசுபிக் பசுமை வலையமைப்பு நாடுகளின் மாநாடு இன்று தாய்வானின் தலைநகர் தாய்பேயில் ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்வரும் 2ம் திகதிவரையில் நடைபெறவுள்ளது. மேலும் »

இமயமலையில பனிப்பொழிவு

இமயமலையில் அதிகமான பனிப்பொழிவுகள் இருக்கும் காலங்களில் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படுகின்றது என்பதோடு மழைபெய்வதும் குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம் என பிரிட்டனின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார். மேலும் »

செயற்கை கால்களை வழங்க இந்திய அமைப்பு உதவி

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக கால்களை இழந்த ஆயிரம் பேருக்கு செயற்கை கால்களை வழங்குவற்கென இந்திய பிறரன்பு நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களை அனுப்பியுள்ளது. மேலும் »

பொறுப்புக் கூறவேண்டிய முழுப்பொறுப்பும் படையினரிடமே

விடுதலைப்புலிகளை போரில் வென்ற படையினருக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கடத்தல், கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களை பூரணமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை நினைக்கும் போது வெட்ட வெளியில் நின்று தலையில் அடித்துக் கத்திக் குழற வேண்டும் போல் உள்ளது. மேலும் »

வீழ்ச்சியில் ஊடக சுதந்திரம் -பிபிசி தமிழோசை

இலங்கையில் ஊடக சுதந்திரம் கோரி நாடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்று  உலகின் அனைத்து பாகங்களிலும் தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக ஃபிரீடம் ஹவுஸ் என்னும் சுயாதீன கண்காணிப்புக் குழுவின் கணிப்பீடு ஒன்று கூறுகிறது. மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசு – வாக்களிக்கும் மக்களுக்கு வன்னி மாவட்ட வெகுஜன அமைப்பின் கோரிக்கை

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் எதிர்வரும் 2-5-2010 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது வன்னி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம். மேலும் »

மகிந்தாவால் வழங்கப்பட்ட காணிக்குள் செல்வதற்கும் பொன்சேகாவுக்கு தடை

விடுதலைப்புலிகளை முறியடித்ததற்காக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கிய காணிக்குள் தற்போது பொன்சேகா பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் »

இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் என்ற தலைப்பில் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரையின் பகுதி – 2 இற்கான மறுப்புக்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் – பகுதி 2

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமார் தரப்பினர், சிவாஜிலிங் கம் தரப்பினர் தேர்தல் பிரச்சாரங்களின்போது பொது எதிரியான சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகளை அம்பலப்படுத்தாது பொது எதிரிக்குச் செல்லும் வாக்குக ளைத் தடுக்காது மகிந்த தரப்பை விமர்சனம் செய்யாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் இலக்கு வைத்து அவர்களை நார் நாராக உரித்தனர். மேலும் »

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு? கோத்தபாயவின் சுய வாக்குமூலம்!

உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் »

தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவோர் மனச்சாட்சியுடன் எம்முன்னால் வரட்டும்: பருத்தியன்

தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. மேலும் »

சிறீலங்காவின் போர்க்குற்றம் – பேராசிரியர் பால் நீயூமன்

மதுரையில் புரட்சிக்கவிஞர் பேரவை சார்பில் இன்று(29.04.2010)  மாலை நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் நிகழ்வில் பெங்களூர் பேராசிரியர் பால் நியூமன் மற்றும் இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் துணைப்பொதுசெயலாளர் சி.மகேந்திரன் ஆகியோர் சிறீலங்காவின் போர்க்குற்றம், குகை வாழ்  ஒரு புலியே என்ற தலைப்பில்  உரையாற்றுவது நேரலையாக நமது மீனகத்தில் ஒளிபரப்பானது. மேலும் »

Thursday, April 29, 2010

Fwd: WATCH LIVE VIDEO NOW: சிறீலங்காவின் போர்க்குற்றம் – பேராசிரியர் பால் நீயூமன்

---------- Forwarded message ----------
From: மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் <meenakam.com@gmail.com>
Date: Thu, 29 Apr 2010 19:54:05 +0530
Subject: WATCH LIVE VIDEO NOW: சிறீலங்காவின் போர்க்குற்றம் –
பேராசிரியர் பால் நீயூமன்
To:

*www.* co.ukme.ukorg.ukcomnetorginfobizusnamemobi
சிறீலங்காவின் போர்க்குற்றம் – பேராசிரியர் பால்
நீயூமன்<http://meenakam.com/?p=14849>

*[நேரலை] *மதுரையில் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன் பிறந்த நாள் நிகழ்வில் பெங்களூர் பேராசியரி பால் நியூமன்
சிறீலங்காவின் போர்க்குற்றம் என்ற தலைப்பில் உரையாற்றுவது நேரலையாக நமது
மீனகத்தில்…


--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

Sunday, April 25, 2010

PHOTOS: அமிதாப்பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் முற்றுகைப்போராட்டம்

www.    

அமிதாப்பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் முற்றுகைப்போராட்டம்

[2ஆம் இணைப்பு] நாம் தமிழர் பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் இன்று  நடிகர்  அமிதாப் இன் வீட்டின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   மேலும் »

மலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது – சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு

சிங்கள இனவெறி அரசு நடத்தியப் போரில் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் 75 பேர், வாழ வழியின்றி மலேசியாவிற்கு அகதிகளாக சென்றனர். அவர்களை மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »

இந்திய பொறியியல் குழுவினர் மூலம் அமைக்கப்படும் வடக்கு புகையிரத பாதைகள்

இந்திய குழுவினரின் நேரடி கண்காணிப்பில் வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரை இன்னமும் அமைக்கப்படாதுள்ள மூன்று மைல் தூரம் கொண்ட புகையிரத பாதையை அமைப்பதற்கே இவர்கள் பயணம் செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் »

தேர்தலின் பின்னரான அரசியல் மாற்றங்கள் – இதயச்சந்திரன்

ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. படுகொலைச் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்காத 12 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் »

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள், சட்டவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்

இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் சென்றபோது வழக்கறிஞர்களால் கறுப்புக்கொடி போராட்டம் நிகழ்த்தப்பட்டது. மேலும் »

எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்

தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு வழிகள் ஊடாகத் தரிப்பிடம் இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது. உரிய உதவிகள் இன்மை, பயணத்திற்கான பாதை தொடர்பில் சர்வதேசத்திற்கு உரிய விளக்கமின்மை, சட்டச் சிக்கல்கள், துரோகங்கள் போன்ற இன்னபிற காரணங்களால் உகந்த தரிப்பிடமின்றி எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. மேலும் »

இரா. சம்பந்தனுக்கு ஓர் அன்பு மடல்

அன்புமிகு சம்பந்தன் ஐயாவுக்கு அநேக வணக்கம். அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு எழுதிய கடிதத்திற்கு முன்னதாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்பதே விருப்பம். மேலும் »

பிரான்சில் நாடு கடந்த தமிழ் ஊடக அமைப்பு உதயம்

பிரான்சில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து செயற்படுவதற்கான முயற்சியாக நாடு கடந்த தமிழ் ஊடக அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. மேலும் »

நாடு கடந்த அரசிற்கான தேர்தலுக்காக பிரான்சில் 17 பேர் போட்டி

நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்சிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் »

தமிழரின் பேரம் பேசும் பலமான சக்தியாக புலம் பெயர் சமூகமே உருவெடுக்கவுள்ளது

இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 144 ஆசனங்களையும், ஐ.தே.க 60 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. மேலும் »

ஆலோசனைக்குழு அமைப்பதை கைவிடுமாறு ஐ.நாவிடம் சிறீலங்கா மீண்டும் கோரிக்கை

சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைக்குழு ஒன்றை அமைப்பதை ஐக்கிய நாடுகள் சபை கைவிட வேண்டும் என சிறீலங்கா அரசு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்: டென்மார்க்கில் 4 வேட்பாளர்கள் போட்டி

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு டென்மார்க்கில் இருந்து மூன்று பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்படவுள்ள தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

மட்டுவில் உணவு விசமானதால் 12 பேர் மருத்துவமனையில்

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள சதாம் உசைன் கிராமத்தில் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இவர்களுக்கே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் »

யாழில் மற்றொரு கடத்தல் பொதுமக்களால் முறியடிப்பு

கடந்த வெள்ளிக்கிழமை கோண்டாவிலில் உள்ள இபோச டிப்போ சந்திக்கு அருகில் 9 ம் வகுப்பு மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்டுள்ளனர். மேலும் »

கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ் திரைப்பட நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்: சீமான் வேண்டுகோள்

சென்ற வருடம் இதே நேரம் எம் ஈழ தேசத்தில் லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளில் மரண ஓலம் கேட்ட்து. அந்த கொடூரத்தில் இருந்து தமிழர்கள் இன்று வரை மீள வில்லை. லட்சக்கணக்கான தமிழர்களின் குருதியில் நனைந்த சிங்கள ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் இப்பொழுது தனிமைப்பட்டு இருக்கின்றது, மேலும் »

இந்திய திரையுலகம் இராசபக்சே கையால் விருது பெறுவதா? – பழ.நெடுமாறன்

இலங்கையில் சூன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் விளம்பரத்தூதராக நடிகர் அமிதாப் பச்சன் இருந்து வருகிறார். மேலும் »

இரணைமடு விமான ஓடுபாதை இந்தியாவின் வசம்

விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதைகள் தற்போது இந்திய இராணுவத்தினரது உபயோகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் »

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் சுரண்டல் நிறுத்தப்படல் வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

வன்னியில் பொதுமக்களது கால்நடைகளை படையினர் அபகரித்தல், நன்னீர் மீன்களை வெளிமாவட்ட மீனவர்கள் பிடித்துச் செல்லுதல் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும் »

விடுதலைப் புலிகளுடனான போரை வெற்றி கொண்டவர் மகிந்தவே! கோத்தபாய இறுமாப்பு!

சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி அரசுக்கு இருந்த அரசியல் விருப்பும், அதன் தந்திரோபாயமுமே தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம் என சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராசபக்ச தெரிவித்துள்ளார். மேலும் »

வடபகுதி காவற்துறை நிர்வாகம் சிங்கள மொழியில் மட்டுமே

வடபகுதியில் இயங்கிவரும் சிறிலங்கா காவல்துறை மற்றும் நீதிமன்ற நிர்வாகங்கள் சிங்கள மொழியில் மட்டும் இயங்கி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

Thursday, April 22, 2010

AUDIO: நடுக்கடலில் ஈழத்தமிழர்கள் 75 பேர் மலேசியா போலீசாரால் சுற்றிவளைப்பு

www.    

நடுக்கடலில் ஈழத்தமிழர்கள் 75 பேர் மலேசியா போலீசாரால் சுற்றிவளைப்பு

இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாட்டில்  ஏதிலியாக தஞ்சம் அடைய சென்ற பெண்கள் குழந்தைகள் உட்பட 75 ஈழத்தமிழர்கள் சென்ற படகை மலேசியா காவல்துறையினர்  8 மணிநேரத்திற்கு முன்பு நடுக்கடலில் சுற்றிவளைத்துள்ளனர். மேலும் »

ஈழமக்களுக்கு மருந்து கடத்தியதாக நாம் தமிழர் பொறுப்பாளர் முத்துகுமாரை கைது செய்ததைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈழத்திலே படுகாயமடைந்துள்ள மக்களைக்காக்க மருந்துப்பொருட்கள் அனுப்பியதாக நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.முத்துக்குமார்  தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து ஈரோடில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் »

பண்டார வன்னியன் நினைவுசின்னம் சிங்கள காடையர்களால் உடைப்பு

தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் சிறிலங்காவின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலை மடு பிரதேசத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் »

யாழ்சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டம்

இன்று முதல் யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 அரசியல் கைதிகள் தம்மீதான விசாரணைகளை அநுராதபுரம் உட்பட்ட தென்னிலங்கை நீதிமன்றங்களுக்கு மாற்றவேண்டாம் என கோரி உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. மேலும் »

அரசுத் தலைவர் செயலக மேற்பார்வைப் பொறுப்பு நாமலிடம் – பசில் அகற்றம்

சிறீலங்கா அரசுத் தலைவரது அலுவலக மேற்பார்வைப் பொறுப்பை தனது சகோதரரும், ஆலோசகருமான பசில் ராஜபக்சவிடம் இருந்து, தனது மகன் நாமல் ராஜபக்சவின் பொறுப்பிற்கு சிறீலங்கா அரசத் தலைவர் மகிந்த ராஜபக்ச மாற்றியிருக்கின்றார். மேலும் »

மோதல் சம்பவம் ஒன்றில் ரத்மலானயில் விமானப்படைவீரர் ஒருவர் பலி

வெடபொல வத்த பிரதேச மக்களுக்கும் ரத்மலான பெலக்கட சந்தியில் விமானப்படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் விமானப்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் »

இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான வாய்ப்பாக தேர்தல் வெற்றியை பயன்டுத்துக! அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வேண்டுகோள்!!

நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பெற்றிருக்கும் வெற்றியை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான காத்திரமான முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் »

பெண்கள் விடுதலை பெற்று வருவதற்கு விடுதலைப் புலிகளே காரணம்! – இன்டர் பிறஸ்

பழமைவாதக் கருத்துக்கள் மற்றும் பாரம்பரியமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளிலில் இருந்தும் யாழ்ப்பாணப் பெண்கள் சிறிது சிறிதாக விடுதலை பெற்று வருவதாக Inter Press Service – IPS  தெரிவித்துள்ளது. மேலும் »

மீண்டும் மீண்டும் இந்தியா விபரீதத்தை விதைத்து வருகிறது தமிழீழ விடுதலைப் போர் அழிந்து விடாது: வைகோ

பா‌ர்வ‌தி அ‌ம்மாளை குடியே‌ற்ற‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ‌‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியதைக் க‌ண்டி‌த்து செ‌ன்னை எ‌ழு‌ம்பூ‌ரி‌ல் ம‌திமுக. சா‌‌ர்‌பி‌ல் இன்று நடைபெற்ற உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌த்தில் உரையாற்றிய வைகோ "ராஜபக்சே திருப்பதி கோவிலில் ராஜ மரியாதையுடன் நடத்தப்பட்டார். அவரது குழந்தைகள் பெங்களூரில் கிரிக்கெட் பார்க்க வேண்டுமா? மீண்டும் மீண்டும் விபரீதத்தை விதைத்து வருகிறீர்கள். தமிழீழ விடுதலைப் போர் அழிந்து விடாது" என்று கூறியுள்ளார். மேலும் »

இனி எங்க பார்வதி அம்மாவை திருப்பி வா என்று அழைத்தால் காரித்துப்பும் – இயக்குநர் சீமான்

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்த ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டமாக மாறியது.பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், மேலும் »

தமிழீழம் அடையும்வரை -கண்மணி

ஒடுக்குமுறைக்கு எதிராக நமது குரலோடு சேர்ந்து செயலும் எழ வேண்டும். ஜனநாயக பண்புக்கான ஒடுக்குமுறை என்பது மக்கள் திரளின் மீது திணிக்கப்பட்ட ஒரு அடக்குமுறை. ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள், அவர்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறையைக் குறித்து சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேலும் »

இரண்டாவது தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறப்பு

சிறிலங்காவில் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் இரண்டாவது தவணை  கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்டது. மேலும் »

ஓமந்தையில் பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர் கைது

பிரான்ஸ்  நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் நேற்று மாலை ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் »

மாற்றுக் கருத்துடையோரை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் – சரத் பொன்சேகா

மாற்றுக்கருத்துடையவர்கள், மாற்றுச் சிந்தனையுடையவர்களை ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் என்றுக்கூறி கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் »

யாழில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில், கடந்த 15 ஆம் திகதி காணமல் போனதாக கூறப்பட்ட வயோதிபர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் »

ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து பிரிகிறோம் – பிரபா கணேசன்

தேசிய பட்டியலில் மனோ கணேசனுக்கு இடம் வழங்காமையால் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஆளும் கட்சியுடன் இணையும் நிலை எழுந்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அறிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் கூடியது – சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டார்

சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதனையொட்டி கொழும்பின் பல பாகங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் »

மகிந்த குடும்பம் மீண்டும் ஆட்சியில் – புதிய சபாநாயகராக மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ச

சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் இன்று காலை கூடியுள்ள நிலையில்,அதன் புதிய சபாநாயகராக அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் »

நாட்டை துண்டாடும் நோக்கில் ததேகூ, முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு -எல்லாவெல

சிறீலங்கா அரசாங்கம் சம்பந்தன், ஹக்கீம் கூட்டணியின் நிபந்தனைகளை நிராகரிக்கவேண்டும் எனவும் அவை நாட்டை துண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்டவை எனவும் ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். மேலும் »

புதிய நாடாளுமன்றின் முதல் கூட்டம்! 225 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம்

இலங்கையின் புதிய நாடாளுமன்றம் இன்று காலை 8.45 மணிக்கு முதல் தடவையாகக் கூடியதும் ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்கின்ற நிகழ்வு இடம்பெறும். மேலும் »