Tuesday, April 6, 2010

சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் – மீனகம்

சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் – மீனகம்

சிறிலங்காவில் எதிர்வரும் ஏப்றல் 8ம் திகதி நடைபெறப்போகும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரப்பணிகள் தற்போது சிறிலங்கா முழுவதிலும் வேகம் பெற்றுள்ள ஒரு நிலையை பொதுவாக அவதானிக்கமுடிகின்றது. வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியும் இதற்கு விதிவிலக்கல்லாத நிலையில் காணப்படுகிறது. மேலும் »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றில் இருந்து பாடம் கற்கவில்லை – Dr.பிறையன் செனவிரட்ன

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற முழக்கங்களுடன் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்" தேர்தல் விஞ்ஞாபனத்தை, தான் வரவேற்பதாக, தமிழ் மக்களின் உரிமைப் போரின் நியாயத்தை கடந்த பல ஆண்டுகளாக உலகிற்கு உணர்த்திவரும் மருத்துவக் கலாநிதி பிறையன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். மேலும் »

ஆசியாவின் மாதிரி சர்வாதிகார ஆட்சி முறைமைக்கான தேர்தல்கள்

தற்போது நடைபெறுகின்ற தேர்தல்கள் வலிந்து நடைமுறைப்படுத்தப்படும் திசை திருப்பும் தந்திரோபாயங்கள் என்றாலும், இந்த சூதாட்டம் எதைநோக்கி செல்கிறது என்பதை சரியாக விளங்கிக்கொண்டால், தமது அபிலாசைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஈழத் தமிழ் மக்கள் அறிந்துகொள்வார்கள். மேலும் »

போராடுவோம்; போராடுவோம் – வித்யாசாகர்!

மாவீரர் நாள்!
இறந்தவர்களின் சமாதிகளை
நனைக்கிறது கண்ணீர், மேலும் »

இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

சிறிலங்காவின் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை இன்று வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. மேலும் »

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப்போகின்றாராம் மகிந்த

மக்களின் வாழ்க்கை சுமையை குறைத்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தவுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் »

கைதான பிக்குமார் பிணையில் விடுதலை

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி வலுயுறுத்தி கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன்பாக உண்ணாநிலைப்போராட்டமிருந்த பிக்குமார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

கலைக்கப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது

கலைக்கப்பட்ட சிறிலங்கா பாராளுமன்றம் இரண்டாவது தடவையாக இன்று கூடவுள்ளது. சிறிலங்காவின் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி கலைக்ககப்பட்ட நாடாளுமன்றம் இன்று கூட்டப்படவுள்ளது. மேலும் »

என்ன மக்காள் செய்வம்…

தேர்தல் பிரசாரப் பீரங்கிகளின் முழக்கம் ஓய்வுக்கு வந்துள்ளது. இந்த ஓய்வு சட்டரீதியானதேயன்றி, வேட்பாளர்களின் விருப்போடு கூடியதல்ல. ஆகவே தேர்தல் நடைபெறும் எட்டாம் திகதி வரை வேட் பாளர்கள் வாக்காளர்களை நோக்கி எங்களுக்கு… எங்களுக்கு… என்று இரகசியமாக வேனும் சொல்லுவார்கள். மேலும் »

அங்கவீனமடைந்த முன்னாள் போராளிகள் இழுத்தடிப்பின் பின்பு விடுவிப்பு; பொறுப்பெடுப்பெடுப்பதற்கு ஆட்கள் இல்லாமையால் சிலர் மீண்டும் தடுத்துவைப்பு

சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 1ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் 1332 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்;. இவர்களுள் 704 ஆண்களும் 467 பெண்களும் அடங்குகிறார்கள். மேலும் »

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான முதலாவது வேட்புமனு இன்று பிரித்தனியாவில் கையளிப்பு

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரித்தானியாவுக்கான முதலாவது வேட்பாளர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.வடமேற்கு லண்டன் தொகுதியில் போட்டியிடும் திரு.நிமலன் சீவரத்தினம் என்பவரே தனது வேட்பு மனுவை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரித்தானியாவுக்கான தேர்தல் ஆணையாளரிடம் இன்று கையளித்தார். மேலும் »

அம்பறைப்பகுதி ஊடகவியலாளருக்கு படைத்தரப்பு மிரட்டல்

அம்பாறை பகுதியில் இருந்து இயங்கிவரும் ஊடகவியலாளர் ஒருவர் தனக்கு தொண்டர் படையணியின் முன்னாள் பணிப்பாளர் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் »

உண்ணாநிலைப் போராட்டமிருந்த புத்தபிக்குகள் மகிந்த ஆட்களால் அப்புறப்படுத்தல்

சரத் பொன்சேகாவை விடுவிக்கக்கோரி உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்ட புத்த பிக்குகள் நிமல் ராஜபக்சேவின் நீலப்படையாட்களால் வலுக்கட்டாயமாக அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் »

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டையில் த.தே.ம.முன்னணியின் கொள்கை விளக்க இறுதிக்கூட்டம்

வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட யாழ் வட்டுக்கோட்டையில், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கொள்கை விளக்க இறுதிப் பொதுக்கூட்டம் இன்றிரவு (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது. மேலும் »

ஓசானிக் வைக்கிங் கப்பல் ஏதிலிகளில் 28பேரை அமெரிக்கா பொறுப்பெடுத்துள்ளது

அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் காப்பற்றப்பட்ட ஓசானிக் வைக்கின் கப்பலில் பிரயாணித்த 78 தமிழ் ஏதிலிகளில் 28 பேரை அமெரிக்கா அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ளது. மேலும் »

நளினி விடுதலையில் கருணாநிதி சொன்னது என்ன நடந்தது என்ன..? – பாவலர் தாமரை

சென்னை, தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் 04-04-2010, ஞாயிறு மாலை 6 மணிக்கு 'நளினி விடுதலை – அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை கீற்று இணையதளம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் உரையாற்றிய பாவலர் தாமரை "நளினி விடுதலையில் மு.கருணாநிதி சொன்னது என்ன நடந்தது என்ன" என்பது பற்றித் தெளிவாக கூறியுள்ளார். மேலும் »

சனத் ஜெயசூரியாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 20 பேர் கைது

சென்னை வந்த சிறிலங்கா கிரிக்கெட் வீரர் சனத் சூரியாவைக் கண்டித்து விமான நிலையம் முன்பு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

ராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன?

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன. மேலும் »

ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம்

ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்? ஏதாவது தகவல் எங்களைப்பற்றி சொல்லுறாங்களா? வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா? கிளி நொச்சியில் இருந்து ஒரு போராளியின் துணைவியார் இவ்வாறு கேட்டார். மேலும் »

துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் »

No comments:

Post a Comment