|
அமிதாப்பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் முற்றுகைப்போராட்டம்
[2ஆம் இணைப்பு] நாம் தமிழர் பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் இன்று நடிகர் அமிதாப் இன் வீட்டின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் »
மலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது – சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு
சிங்கள இனவெறி அரசு நடத்தியப் போரில் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் 75 பேர், வாழ வழியின்றி மலேசியாவிற்கு அகதிகளாக சென்றனர். அவர்களை மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »
இந்திய பொறியியல் குழுவினர் மூலம் அமைக்கப்படும் வடக்கு புகையிரத பாதைகள்
இந்திய குழுவினரின் நேரடி கண்காணிப்பில் வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரை இன்னமும் அமைக்கப்படாதுள்ள மூன்று மைல் தூரம் கொண்ட புகையிரத பாதையை அமைப்பதற்கே இவர்கள் பயணம் செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் »
தேர்தலின் பின்னரான அரசியல் மாற்றங்கள் – இதயச்சந்திரன்
ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. படுகொலைச் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்காத 12 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் »
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள், சட்டவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்
இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் சென்றபோது வழக்கறிஞர்களால் கறுப்புக்கொடி போராட்டம் நிகழ்த்தப்பட்டது. மேலும் »
எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்
தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு வழிகள் ஊடாகத் தரிப்பிடம் இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது. உரிய உதவிகள் இன்மை, பயணத்திற்கான பாதை தொடர்பில் சர்வதேசத்திற்கு உரிய விளக்கமின்மை, சட்டச் சிக்கல்கள், துரோகங்கள் போன்ற இன்னபிற காரணங்களால் உகந்த தரிப்பிடமின்றி எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. மேலும் »
இரா. சம்பந்தனுக்கு ஓர் அன்பு மடல்
அன்புமிகு சம்பந்தன் ஐயாவுக்கு அநேக வணக்கம். அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு எழுதிய கடிதத்திற்கு முன்னதாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்பதே விருப்பம். மேலும் »
பிரான்சில் நாடு கடந்த தமிழ் ஊடக அமைப்பு உதயம்
பிரான்சில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து செயற்படுவதற்கான முயற்சியாக நாடு கடந்த தமிழ் ஊடக அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. மேலும் »
நாடு கடந்த அரசிற்கான தேர்தலுக்காக பிரான்சில் 17 பேர் போட்டி
நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்சிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் »
தமிழரின் பேரம் பேசும் பலமான சக்தியாக புலம் பெயர் சமூகமே உருவெடுக்கவுள்ளது
இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 144 ஆசனங்களையும், ஐ.தே.க 60 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. மேலும் »
ஆலோசனைக்குழு அமைப்பதை கைவிடுமாறு ஐ.நாவிடம் சிறீலங்கா மீண்டும் கோரிக்கை
சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைக்குழு ஒன்றை அமைப்பதை ஐக்கிய நாடுகள் சபை கைவிட வேண்டும் என சிறீலங்கா அரசு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் »
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்: டென்மார்க்கில் 4 வேட்பாளர்கள் போட்டி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு டென்மார்க்கில் இருந்து மூன்று பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்படவுள்ள தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
மட்டுவில் உணவு விசமானதால் 12 பேர் மருத்துவமனையில்
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள சதாம் உசைன் கிராமத்தில் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இவர்களுக்கே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் »
யாழில் மற்றொரு கடத்தல் பொதுமக்களால் முறியடிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை கோண்டாவிலில் உள்ள இபோச டிப்போ சந்திக்கு அருகில் 9 ம் வகுப்பு மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்டுள்ளனர். மேலும் »
கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ் திரைப்பட நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்: சீமான் வேண்டுகோள்
சென்ற வருடம் இதே நேரம் எம் ஈழ தேசத்தில் லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளில் மரண ஓலம் கேட்ட்து. அந்த கொடூரத்தில் இருந்து தமிழர்கள் இன்று வரை மீள வில்லை. லட்சக்கணக்கான தமிழர்களின் குருதியில் நனைந்த சிங்கள ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் இப்பொழுது தனிமைப்பட்டு இருக்கின்றது, மேலும் »
இந்திய திரையுலகம் இராசபக்சே கையால் விருது பெறுவதா? – பழ.நெடுமாறன்
இலங்கையில் சூன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் விளம்பரத்தூதராக நடிகர் அமிதாப் பச்சன் இருந்து வருகிறார். மேலும் »
இரணைமடு விமான ஓடுபாதை இந்தியாவின் வசம்
விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதைகள் தற்போது இந்திய இராணுவத்தினரது உபயோகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் »
முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் சுரண்டல் நிறுத்தப்படல் வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்
வன்னியில் பொதுமக்களது கால்நடைகளை படையினர் அபகரித்தல், நன்னீர் மீன்களை வெளிமாவட்ட மீனவர்கள் பிடித்துச் செல்லுதல் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும் »
விடுதலைப் புலிகளுடனான போரை வெற்றி கொண்டவர் மகிந்தவே! கோத்தபாய இறுமாப்பு!
சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி அரசுக்கு இருந்த அரசியல் விருப்பும், அதன் தந்திரோபாயமுமே தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம் என சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராசபக்ச தெரிவித்துள்ளார். மேலும் »
வடபகுதி காவற்துறை நிர்வாகம் சிங்கள மொழியில் மட்டுமே
வடபகுதியில் இயங்கிவரும் சிறிலங்கா காவல்துறை மற்றும் நீதிமன்ற நிர்வாகங்கள் சிங்கள மொழியில் மட்டும் இயங்கி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
No comments:
Post a Comment