நேரலை அறிவிப்பு: மே 01 தாயக நேரப்படி காலை 10 மணி
எதிர்வரும் மே 18 ஆம் திகதி நாம் தமிழர் அரசியல் கட்சி அறிவிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்புக்கூட்டம் மே 1 ஆம் திகதி நடைபெறுகிறது. நாம் தமிழர் இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் பங்குபெறுகிறார். மேலும் »
ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் உள்விவகாரங்களில் கட்டளையிடவில்லை -செவாக்
ஐரோப்பிய ஒன்றியம் அவசரகாலசட்டம் இன்னமும் அமுலில் இருப்பது தொடர்பிலும் சரத்பொன்சேகா அவர்கள் இராணுவ தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் தமது கவலையை வெளியிட்டுள்ளது. மேலும் »
யாழில் மீண்டும் படையினரது நடமாட்டம் அதிகரிப்பு
கடந்த வருடம் வன்னியில் சிறீலங்கா அரசு பல சர்வதேச உதவிகளுடன் மேற்கொண்ட போர் முடிவுக்கு வந்த பின்னர் சற்று குறைந்து இருந்த படையினரது நடமாட்டம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் »
5000 ரூபாயுடன் வன்னி மக்களை குடியேற்றும் சிறிலங்கா
வன்னியில் சிறீலங்கா கொடுத்த இன அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு போரினால் இடம்பெயர்ந்து தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு கடும் சோதனைகள் விசாரணைகளுக்கு பின்னர் குடியேற்றப்படும் மக்கள் தொடர்ந்தும் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக வன்னியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி த.தே.கூவிற்கு இந்தியா அழுத்தம்
சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்தவிற்கு இந்த ஆதரவை வழங்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »
மாமனிதர் "தராகி" சிவராமின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் லண்டனில் நடைபெற்றது
மாமனிதர் "தராகி" சிவராமின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு "தமிழர் சட்ட ஆலோசனைக் குழு" ஏற்பாட்டில் நேற்றிரவு லண்டனில் நடைபெற்றது. மேலும் »
"சிங்களமயமாக்கலில் தாய்மண்ணைக் காப்போம்" எச்சரிக்கை – யாழில் துண்டுப்பிரசுரம்
வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் »
போர் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும் -அரசியல் ஆய்வாளர் – க.வீமன்
போர் மரபுகளை மீறியதற்காகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததற்காகவும் இன அழிப்பில் ஈடுபட்டதற்காகவும் அப்பாவிப் பொது மக்களின் குறிப்பாகப் பெண்கள் குழந்தைகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தவறியதற்காகவும் சிறிலங்கா தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் சர்வதேச மட்டத்தில் வலுத்து வருகிறது. மேலும் »
மலேசியாவில் தமிழ் வர்த்தகர் சிறீலங்காவிற்கு நாடுகடத்தல்
நோர்வே, ஜெர்மனி, சுவிட்சாலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் மலேசியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். மேலும் »
ஆசிய பசுபிக் பசுமை வலையமைப்பு நாடுகளின் மாநாடு இன்று தாய்வானில்
ஆசிய பசுபிக் பசுமை வலையமைப்பு நாடுகளின் மாநாடு இன்று தாய்வானின் தலைநகர் தாய்பேயில் ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்வரும் 2ம் திகதிவரையில் நடைபெறவுள்ளது. மேலும் »
இமயமலையில பனிப்பொழிவு
இமயமலையில் அதிகமான பனிப்பொழிவுகள் இருக்கும் காலங்களில் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படுகின்றது என்பதோடு மழைபெய்வதும் குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம் என பிரிட்டனின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார். மேலும் »
செயற்கை கால்களை வழங்க இந்திய அமைப்பு உதவி
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக கால்களை இழந்த ஆயிரம் பேருக்கு செயற்கை கால்களை வழங்குவற்கென இந்திய பிறரன்பு நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களை அனுப்பியுள்ளது. மேலும் »
பொறுப்புக் கூறவேண்டிய முழுப்பொறுப்பும் படையினரிடமே
விடுதலைப்புலிகளை போரில் வென்ற படையினருக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கடத்தல், கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களை பூரணமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை நினைக்கும் போது வெட்ட வெளியில் நின்று தலையில் அடித்துக் கத்திக் குழற வேண்டும் போல் உள்ளது. மேலும் »
வீழ்ச்சியில் ஊடக சுதந்திரம் -பிபிசி தமிழோசை
இலங்கையில் ஊடக சுதந்திரம் கோரி நாடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்று உலகின் அனைத்து பாகங்களிலும் தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக ஃபிரீடம் ஹவுஸ் என்னும் சுயாதீன கண்காணிப்புக் குழுவின் கணிப்பீடு ஒன்று கூறுகிறது. மேலும் »
நாடு கடந்த தமிழீழ அரசு – வாக்களிக்கும் மக்களுக்கு வன்னி மாவட்ட வெகுஜன அமைப்பின் கோரிக்கை
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் எதிர்வரும் 2-5-2010 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது வன்னி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம். மேலும் »
மகிந்தாவால் வழங்கப்பட்ட காணிக்குள் செல்வதற்கும் பொன்சேகாவுக்கு தடை
விடுதலைப்புலிகளை முறியடித்ததற்காக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கிய காணிக்குள் தற்போது பொன்சேகா பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் »
இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் என்ற தலைப்பில் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரையின் பகுதி – 2 இற்கான மறுப்புக்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் – பகுதி 2
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமார் தரப்பினர், சிவாஜிலிங் கம் தரப்பினர் தேர்தல் பிரச்சாரங்களின்போது பொது எதிரியான சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகளை அம்பலப்படுத்தாது பொது எதிரிக்குச் செல்லும் வாக்குக ளைத் தடுக்காது மகிந்த தரப்பை விமர்சனம் செய்யாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் இலக்கு வைத்து அவர்களை நார் நாராக உரித்தனர். மேலும் »
முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு? கோத்தபாயவின் சுய வாக்குமூலம்!
உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் »
தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவோர் மனச்சாட்சியுடன் எம்முன்னால் வரட்டும்: பருத்தியன்
தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. மேலும் »
சிறீலங்காவின் போர்க்குற்றம் – பேராசிரியர் பால் நீயூமன்
மதுரையில் புரட்சிக்கவிஞர் பேரவை சார்பில் இன்று(29.04.2010) மாலை நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் நிகழ்வில் பெங்களூர் பேராசிரியர் பால் நியூமன் மற்றும் இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் துணைப்பொதுசெயலாளர் சி.மகேந்திரன் ஆகியோர் சிறீலங்காவின் போர்க்குற்றம், குகை வாழ் ஒரு புலியே என்ற தலைப்பில் உரையாற்றுவது நேரலையாக நமது மீனகத்தில் ஒளிபரப்பானது. மேலும் »
No comments:
Post a Comment