Sunday, June 20, 2010

மதுரையில் இரு வழக்கறிஞர்களின் உடல்நிலை கவலைக்கிடம்


மதுரையில் வழக்கறிஞர்களின் உடல்நிலை கவலைக்கிடம்

தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி மதுரையில் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிகள் பகத்சிங் மற்றும் நடராசன் ஆகியோரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடாது- யசூஷி அகாஷி

20080114142857mahindarajapakseyashishiaka

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட மாட்டாது என ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்தார்.கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். மேலும் »

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அமெரிக்காவை சென்றடைந்தார்

J.S. Tissainayagam

சிறீலங்கா அரசினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பன்னாட்டு ஊடக அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அமெரிக்காவை சென்றடைந்துள்ளதாக, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு (CPJ – Committee to Protect Journalist) தெரிவித்துள்ளது. மேலும் »

இன்று உலக அகதிகள் தினம்

sri-lanka-civilians-tamil-refugees-kadirgamh-chettikulam

இன்று உலக அகதிகள் தினமாகும்.உலகளாவிய ரீதியில் இடம்பெயர்ந்துள்ள 40 கோடி மக்களுக்கான அங்கீகாரத்தின் பொருட்டு இவ்வாண்டுக்கான தொனிப்பொருளாக 'வீடு'அடையாளம் காணப்பட்டுள்ளது இவர்களில் சுமார் 10 கோடிப்பேர்   அகதிகளாகக்காணப்படுகின்றனர். மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் – ஜேர்மனி

vote_eelam

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜேர்மனியின் Nordrhein-Westfalen மாநிலத்தில் (தேர்தல் தொகுதி 3)  20.06.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும். மேலும் »

எங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும்….

Bagath Singh,  before he was arrested

மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது. மேலும் »

பார்வதி அம்மாளை இந்தியா கொண்டுசெல்ல திருமாவளவன் தொடர்புகொள்ளவில்லை- சிவாஜிலிங்கம்

tna.sivajilingam.002

தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை இந்தியா கொண்டு செல்வதற்காக தொல்.திருமாவளவன் தன்னுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் . மேலும் »

செம்மொழி யார் மொழியப்பா?

Semmoly

செம்மொழி மாநாடாம்.. தமிழ் திருநாட்டில்?
அம்மொழி எம்மொழியைச் சார்ந்ததாம்..?
செந்தமிழ் மாநாடென்றறிவிக்கவில்லையே -அப்போ? மேலும் »

சீனத்து சிறைக்கைதிகளுக்கும் கொடுத்து விட்டார்கள் மேய்வதற்கு வேலி.. இனியும் இலங்கையிலே தழைக்குமா தமிழ் இனமென்னும் பயிர்.. – டி.ராஜேந்தர்

TR

பழி வாங்கும் படலம் என்ற பெயரில் இலங்கையில் தமிழர்களைச் செய்து விட்டார்கள் காலி.. இதிலே சீனத்து சிறைக்கைதிகளுக்கும் கொடுத்து விட்டார்கள் மேய்வதற்கு வேலி.. இனியும் இலங்கையிலே தழைக்குமா தமிழ் இனமென்னும் பயிர்.. என்று டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் »

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டத்தால் தமிழ் அரியணையில் அமரும்-சீமான்

seemaan_speech

அறிவார்ந்த எமது வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கிப் போராடி கைதாகி உள்ளனர்.அவர்கள் போராட்டம் இன்றில்லாவிட்டாலும் நாளை வெற்றிபெறும்,அன்னைத்தமிழ் நீதிமன்றத்தில் அரியணையில் அமரும் என்று நாம் தமிழர் இயக்க சீமான் தெரிவித்துள்ளார். மேலும் »

மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் ராவணன் படம் போட்டதால் சிறீலங்காப்படையினரால் தீக்கிரை

6

மட்டக்களப்பு, கல்லடியில் ராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

தாய்த்தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கான பட்டினிப் போராட்டம். டென்மார்க் தமிழர் பேரவையின் பெருமையும் வேதனையும்.!!

dtf

தாய்த் தமிழ் நாட்டில் நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிட உரிமைகோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்டவாளர்களை பாராட்டுவதில் டென்மார்க் தமிழர் பேரவையினர் பெருமைகொள்வதுடன் வேதனையும் அடைகின்றோம். மேலும் »

பட்டினிப்போர் நடத்திய வழக்குரைஞர்கள் தமிழக காவல்துறையால் கைது

fasting_advocates

தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி பட்டினிப்போரில் ஈடுபட்ட மதுரை மற்றும் சென்னை சட்டவியலாளர்கள் தமிழக அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் சிங்கள மாணவரிடையே மோதல்

eastern_university

கிழக்குப் பல்கலைக்கழகத்திலே தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையே மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடிபோதையில் இருந்த சிங்கள மாணவர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இந்த மோதல் ஆரம்பமானதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தல்: 35க்கு மேற்பட்ட நிலையங்களில் வாக்களிப்பு

THESIYA-NCCT_1

யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 35க்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் »

மட்டக்களப்பிலுள்ள திரையரங்கத்திற்கு தீ வைப்பு

fire

மட்டக்களப்பு நகரிலுள்ள சினிமாத் திரையரங்கமொன்றிற்கு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். மேலும் »

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சி குறித்து ஐ.நா கவனம்

uno-f

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து காணப்படுகின்ற நிலையில், அவர்களுக்கு உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தல் தொடர்பிலான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி ஒழுங்கமைப்பின் பணிப்பாளர், கன்டேஹ் யும்கெல்லா தெரிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்காவில் வெள்ளை வான் கடத்தல் தொடர்கின்றது: தென்னிலங்கை அரசியல்வாதியும் கடத்தல்

white van

சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல்களினால் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (15) வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மேலும் »

யாழ். பல்கலை – 4 விரிவுரையாளர்களுக்கு எதிராக எச்சரிக்கை

jaffna uni

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நால்வருக்கு எதிராக, 'இறுதி எச்சரிக்கை – பல்கலைக்கழக மாணவர் சமூகம்' என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம்! வி.ருத்ரகுமாரன்

uruththirakumaran

கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் நடைபெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டு அணுகுமுறையினையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையினையும் மக்களுக்கு அறியத் தருதல் அவசியமானது எனக் கருதுகிறோம். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment