குண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற மாணவர் புஷ்பக்காந்தனை வாழ்த்துவோம்
இலங்கையில் ஒரு தமிழனின் சாதனைஅண்மைக் காலமாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளில் பிரபலமாகப் பேசப்பட்டதானது , அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளில் முன்னிலைமை பெற்றவர்களுக்கு முதல்வரின் நேரடி வாழ்த்தும் , வழங்கிய பரிசும் பற்றிய சந்தோசமானதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதுமான செய்தியாகும். மேலும் »
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு-பொன். ராதாகிருஷ்ணன்
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் »
கோவை செம்மொழி (கலைஞர் புகழ்) மாநாடு நேரலை
தமிழ்மொழியும் தமிழினமும் அழிந்துகொண்டிருக்கும் நிலையில் கலைஞர் புகழ்பாடும் மேடை, செம்மொழி மாநாடாம்… மொழி வளர்ப்பாம்… இனத்தை காக்காத கூட்டம் மொழி காக்க கிளம்பி இருக்கு காண்க… மாநாடு…
ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை ஏதிலிகள்; தீர்மானம் எடுக்கப்படும்- ஜூலியா கில்லார்ட்
அரசியல் புகலிடம் கோரிச் செல்கின்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக பதிவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் தெரிவித்தார்.
மேலும் »
யாழ் குடாநாட்டிற்கு பிரிட்டிஷ் துணைத் தூதுவர் நாளை விஜயம்
யாழ் குடாநாட்டிற்கான விஜயமொன்றை பிரிட்டிஷ் துணைத் தூதுவர் நாளை மேற்கொள்ளவுள்ளார்.யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இவர் அங்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் »
30,000 பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி உள்ளனர்
2010ம் ஆண்டின் முடிவில் தொழில் அற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கும் என தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.3 ஆயிரத்து 174 கலைத்துறை பட்டதாரிகள், மேலும் »
உலகத் தமிழர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழத் திரைப்படக் குழு விடுக்கும் முக்கிய அறிவித்தல்
யாழ்ப்பாண மண்ணிலே, ஈழத் திரைப்படக் குழுவால் தயாரிக்கப்பட இருந்த "சொந்த மண்ணைத் தேடி" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பதை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். மேலும் »
நயினாதீவு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நிலையில், பக்தர்கள் புடைசூழ தேரில் அம்பாள் வீற்றிருந்து வலம் வருவதை படத்தில் காணலாம். மேலும் »
தமிழ் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள்
தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட இருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். மேலும் »
உலகத் தமிழர் மாநாட்டின் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதுடன் ஈழத்தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்றுவரும் உலகத் தமிழர் மாநாட்டில் ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உருவாக்கியவர்களும் முற்றாக புறம்தள்ளப்பட்டு வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் »
ஆஸ்த்திரேலியா கடற்பரப்பில் 96 ஏதிலிகளுடன் படகு மீட்பு
ஈழத்தமிழர்களும் இருக்கலாம் என நம்பப்படுகின்ற படகொன்று 96 ஏதிலிகளுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளை ஒருங்கிணைத்து ஐ.நாவுக்கு எதிராக போராட சிறீலங்கா திட்டம்
ஆசிய நாடுகளையும், அணிசேரா நாடுகளையும் ஒருங்கிணைத்து ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழுவுக்கு எதிராக போராடுவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் »
நிபுணர் குழுக்களும் வரிச்சலுகை சிக்கல்களும்
இறுதிப் போர் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் நிபுணர் குழுவொன்றினை அமைத்துள்ளது ஐ.நா. இலங்கை அரசு உருவாக்கியிருக்கும் உண்மையை கண்டறியும் நல்லிணக்க நிபுணர் குழுவிற்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அறிவித்துள்ள மூவரடங்கிய நிபுணர் குழுவிற்கும் இடையே செயற்பாட்டளவில் காணப்படும் வேறுபாடுகள் எவை என்பது குறித்த தெளிவு இன்னமும் இல்லை. மேலும் »
எதிர்வரும் மாதங்களில் இலங்கை குறித்து உலக அரசியலில் மாற்றம் வரலாம்
கடந்து சென்ற வாரம் ஸ்ரீலங்காவில் பல இராஜதந்திர நெருக்கடிகளை தோற்றுவித்துச் சென்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றிபெற்ற அரச தரப்பு அனைத்துலக ரீதியாக மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் வெற்றியளிக்கவில்லை. மேலும் »
போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! பாகம் 8 – அரசியல் ஆய்வாளர் க. வீமன்
சிறிலங்கா அரசின் ஈழத் தமிழர்கள் தொடர்பான திட்டவரையில் தமிழர்களுடைய தொல்குடி ஆதரங்களை அழிக்கும் திட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழர் வந்தேறு குடிகள் என்ற சிங்கள பேரினவாதத்தின் கூற்றிற்கு உரம் சேர்க்கும் விதத்தில் இந்த அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் »
தமிழீழ அரசு கனடா செய்தித்தாள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கனடாவிலிருந்து வெளியிடப்படும் செய்தித்தாள் இணைக்க்கப்பட்டுள்ளது… மேலும் »
தமிழீழம்-எதிரியை வீழ்த்துவோம் -கண்மணி
எமது கருத்துக்கெதிராக முரண்களம் அமைப்பதாக கருதி இனவிரோதிகளாக சிலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் »
மணமகன் இல்லாத திருமணம்
ரோம் நகர் எரிந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த நாட்டு மன்னன் நீரோ பிடில் வாசித்துக்கொண்டு இருந்தார் என்பதை வரலாற்றில் படித்து இருப்போம் அதனை போன்று ஈழம் அழிந்து கொண்டு இருக்கும் பொழுது இங்கே செம்மொழி மாநாடு நடைபெருவதை மேலும் »
அமெரிக்காவில் தஞ்சமடைந்த ராவய பத்திரிகை ஆசிரியரின் பதவி பறிப்பு
சிறீலங்கா அரசின் தாக்குதலுக்கு உள்ளான ராவய பத்திரிகை ஆசரிரியர் தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள போதும் அவரின் பதவி பறிக்கப்பட்டதுடன், ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் »
சிறீலங்கா அரசு ஜி.எஸ்.பி.பிளஸ் தொடர்பில் உத்தியோகபூர்வ பதில் இன்னும் வழங்கவில்லை: ஐரோப்பிய ஒன்றியம்
தமது நிபந்தனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ பதிலை இன்னமும் வழங்கவில்லை என அறிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்துடன் ஆடை ஏற்றுமதி தொடர்பிலான ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் பேசுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment