Monday, February 1, 2010

பிரபாகரன் இருக்கிறார்’ என்கிற உறுதியான மனநிலையே தமிழ் மக்களுக்கு உயரிய பாதுகாப்பு: செல்வம் அடைக்கல நாதன்

'பிரபாகரன் இருக்கிறார்' என்கிற உறுதியான மனநிலையே தமிழ் மக்களுக்கு உயரிய பாதுகாப்பாக இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
1 February 2010
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நேற்று முன்தினமும் (30) நேற்றும் (31) பிரித்தானியாவில் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியலில் தம்மால் முடிந்த காத்திரமான செய்தி ஒன்றை தாயகத்து மக்கள் கூறிச்செல்ல, இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்து தமிழ் மக்கள் தமது ஜனநாயகப் பாதைக்கான அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர்.
1 February 2010
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில்  சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர். அந்த வகையில்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும்  மக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக உணர்த்தியுள்ளனர். அதாவது மஹிந்த இராசபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தமது அதிருப்தியினை  மட்டுமன்றி விடுதலைக்கான ஒற்றுமையினையும், தேசிய உணர்வையும் வெளிக்காட்டியுள்ளனர்.
30 January 2010
[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில்  சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
29 January 2010


No comments:

Post a Comment