இராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடாவில் சேதுசமுத்திரத்திட்ட ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வுக்குழுவினர் இந்தப் பணிக்காக அந்தப் பகுதி மீனவர்களின் நாட்டுப்படகு மற்றும் விசைபடகுகளைப் பயன்படுத்துகின்றனர் மேலும் ஆய்வுக்கருவிகள் மற்ற மீன்பிடிப் படகுகளால் சேதமடைவதைத் தடுக்க அப்பகுதி மீனவர்களும் காவல் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை விவகாரத் தில் இலங்கைத் தேசம், இனிமேல், மியன்மார், வட கொரியா, ஸிம்பாப்வே போன்ற நாடுகளின் வரிசையில் சேர்க்கப்படலாம் என ஊடகவியலாளரைப் பாதுகாப் பதற்கான சர்வதேசக் குழு கோடி காட்டியிருக்கின்றது.
ஒரு காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சராக அமர்ந்து தன் எஜமானருக்கு வழங்கிய சேவை காரணமாக, அவரை ஆட்டுவித்த இந்தியா, வரதராஜப்பெருமாளை இப்போதும் பாதுகாப்பாகப் பராமரித்து வருகின்றது. இந்த நிலையில், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து, அதனால் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களை சிங்கள தேசம் கைவிட்டுவிடவா போகின்றது?
உள்நாட்டுப் போர் முடிவுற்றாலும் எதிர்பார்த்த அமைதி சிறிலங்காவில் ஏற்படவில்லை முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் கடும் போர் நடத்திய பிரான்சும் ஜேர்மனியும் இன்று உறுதியான நட்பு நாடுகளாகி விட்டன இது போன்ற ஒரு நிகழ்வைச் சிறிலங்காவில் காணமுடியாது தமிழ்-சிங்களப் பகைமை பல நூற்றாண்டுக்குப் பழமை வாய்ந்தது மனதிலே பகை உதட்டிலே நட்பு என்ற அடிப்படையில் இரு பக்க உறவுகள் இடம் பெறுகின்றன சிறிலங்கா இனப்பிரச்சனை புற்று நோய் போன்றது அது மறைவது போல் இருந்து மீண்டும் தோண்றி விடும் தமிழர்களைத் தோற்கடிக்கும் நோக்குடன் ஒன்றிணைந்த சிங்கள இனத்தவர்கள் மத்தியில் போர் முடிந்ததும் வெடிப்புக்கள் தோன்றிவிட்டன சிங்கள ஒற்றுமைக்கு ஒரு பொது எதிரி தேவைப்படுகிறது.
மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.
No comments:
Post a Comment