
இன்று இந்தியா முழுக்க ஏராளமான ஆதரவற்றோருக்கான இல்லங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக முதியோர்களுக்கான இல்லங்கள் என்பது நமக்கு ஏற்புடையதல்ல. காரணம் இந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாடு சீர்கெட்டு போனதற்கான அடையாளங்கள் தான் முதியோர் இல்லங்களாக முத்திரைப் பதிக்கிறது. எந்தஒரு முதியோர் என்பவரும் முன்பு ஒரு குழந்தையின் தாயாக, தந்தையாக இருந்திருப்பவர்தான். ஏன் அவர் புறக்கணிக்கப்பட்டார்? ஏன் அவர் புறக்கணிக்கப்பட வேண்டும்? என்கிற ஏராளமான கேள்விகள் நமக்குள் குடைந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அதை பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை.
No comments:
Post a Comment