Friday, February 12, 2010

மனநோயாளியான ராஜபக்சே – கண்மணி

இந்த உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் யார் தெரியுமா? கண்ணுக்குத் தெரிந்த அதிபர்களா? ஆட்சியாளர்களா? மக்களால் தேர்வு செய்யப்பட்ட குடியரசு தலைவர்களா? இல்லை. இந்த நாட்டை மாபெரும் பணக்காரர்களாக உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரால் மட்டுமே ஆட்சி அதிகாரமும் ஆட்சி மாற்றமும் உலகெங்கும் செயல்படுத்திக் கொண்டிருப்பதாக நாம் எண்ணலாம். ஆனால் அதையெல்லாம் மீறி இந்த உலகின் எந்த மூளையில் ஒரு வெடிகுண்டு வெடித்தாலும் அதற்குக் காரணமாய் ஆயுத வியாபாரிகள் இருக்கிறார்கள் என்பதை நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
12 February 2010
சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் காய்களாகும் தகுதியை ஈழத் தமிழர்கள் எப்போது பெறுகின்றார்களோ அப்போதுதான் அந்த சர்வதேச அரசியல் தமிழர்கள் பக்கமாக திரும்பும், அதுவரை அது கொழும்புடன்தான். ஆனாலும் நமது சூழலில் பூகோள அரசியல் நகர்வுகள் குறித்து மிகவும் எழுந்தமானமான பார்வையே நிலவி வருகிறது. "முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடக்கம் என்று சொல்லுவோர் இலங்கை சர்வதேச அரசியல் நகர்வின் சதுரங்கமாக மாறப் போகிறது என்பது குறித்து அவதானிப்பது அவசியம். வெறுமனே மேற்கின் வீதிகளில் ஒரு சுலோகத்தை தூக்கிக் கொண்டு நிற்பதன் மூலம் இந்த சதுரங்கத்தை ஆட முடியாது.
12 February 2010

No comments:

Post a Comment