
இலங்கையின் 62ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. ''சுதந்திரம்'' என்பதன் காற்றைக்கூட சுவாசிக்க முடியாத மக்கள் நாட்டில் இருக்கும் போது சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெறுவது என்பது வெறும் சம்பிரதாயமான விடயமே அன்றி அதில் உள்ளார்ந்தமான பற்றுதல் ஏதும் இருக்க முடியாது.அதிலும் 2010ஆம் ஆண்டில் நடைபெறும் 62ஆவது சுதந்திர தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.அவ்வாறாயின் இலங்கையின் 62ஆவது சுதந்திரதினத்தை ஆளும் தரப்பு மட்டுமே கொண் டாடவுள்ளது.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அண்மையில் அதாவது 02 /01 /2010 இல் நடத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் மிகுந்த மன வேதனையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடைபெற்ற சம்பவம்.
No comments:
Post a Comment