பிப்ரவரி 17 அன்று சென்னை மெமோரியல் ஹாலில், இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை அளிக்கக் கோரி திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்பாட்ட முடிவில் வீரமணி செய்தியாளர்களிடம் "இலங்கையில் தமிழினம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்னும் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை ஆயிரக்கணக்கான இளஞர்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை" என்று அறியப் பெரிய உண்மைகளையெல்லாம் இப்போது தான் துப்பறிந்து வந்தது போல் அடுக்கியவர் இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இங்கு நடத்தப் பட்ட முறைமை குறித்தும், அதன் பெறுபேறுகள் குறித் தும் பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பின்புலத்தில் இந்தத் தேர்தல் தொடர்பாகக் கண் காணிப்புக் குழுக்கள் அதுவும் சர்வதேசக் கண்காணிப் புக் குழுக்கள் வெளியிடும் அவதானிப்பு அறிவிப்புகள் மிக முக்கியமானவையாகின்றன.
No comments:
Post a Comment