நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்று தோழர் பகத்சிங் சொல்வார். எந்த ஒரு போராட்டமும் தமது எதிரியாலேயே முன்னோக்கி தள்ளப்படுகிறது. தமிழீழம் என்கிற முழுமை பெற்ற ஒரு வார்த்தை அல்லது ஒரு லட்சியம் சிங்கள பேரினவாதத்தின் கடும் போக்காலேயே நம் ஆழ் மனங்களிலே வேரூன்றிவிட்டது.
மீனகம் இணைய தளம் வெளியிட்டு இருந்த இராவணன் எழுதிய கட்டுரைக்கு போதிய விளக்கமும் பதில்களும் கொடுத்த பின்னரும் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக விமர்சனத்தை வைக்கும் கட்டுரைகளை வெளியிடும் மீனகமும், சாதிய கண்ணோட்டத்தில் பதிலுரைத்து வரும் இராவணனும் தம் பொது முகத்தை இழந்து நிற்கிறார்கள்.. சாதி ஒழிப்பை கொள்கையாக ஏற்று கொண்ட மேதகு பிரபாகரன் வழிநடத்தும் ஈழ தேசத்தில் இது போன்ற சாதியவெறியர்களுக்கு இடமில்லை.
அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன் கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு , பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன்.
இலங்கை நெருக்கடி உலக அரங்கின் பார்வையாளர்களை தம் பக்கம் திருப்பியிருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் தமது இடைவிடாது கேவலமான எண்ணத்தை சொந்த இனத்தின் மீதே பதிவு செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment