தமிழன் உலகெங்கும் தமக்கான ஆற்றலை, ஆளுமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றான். ஆனால் தமிழின ஆளுமையை தந்திரமாக அழித்தொழிக்க அனைத்து நகர்வுகளையும் பல்வேறு முறைகளில், பல உருவங்களில், பல தேசிய இனங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் கூட, தமிழினம் இன்னும் தம்மை ஓர்மைப் பண்புக்குள் கொண்டுவராமல் பல்வேறு பிளவுகளை உருவாக்கிக் கொண்டு, தமிழனுக்குள் தமிழன் எதிரணியாய் களம் புகும் அவலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான்.

No comments:
Post a Comment