
பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும் கனடாவின் புலனாய்வுத்துறை முனைப்பாக ஈடுபடுகிறது காவல்துறை ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க வாய்ப்பில்லை கனடா தன்னை மக்கள் ஆட்சி நடக்கும் நாடென்றும் நிற வேற்றுமை அங்கு கிடையாது என்றும் சொல்லிக் கொண்டாலும் தமிழர் வாழ்வில் இன ஒதுக்கலும் உரிமை மறுப்பும் வெளிப்படையாகத் தெரிகின்றன இதற்கு கனடாவின் புலனாய்வுத்துறைச் செயற்பாடுகள் முக்கிய காரணமாக அமைகின்றன.
No comments:
Post a Comment