மக்களை தம்பக்கம் இழுக்க சிறிலங்கா இராணுவத்தால் 680 வீடுகள்
யாழ்.குடா நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் அடையாளம் காணப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து வீடுகளை கட்டிக்கொடுக்கும் விசேட திட்டம் ஒன்றை சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். இராணுவ தலைமையகம் மேற்கொண்டுள்ளது. மேலும் »
இன்றும் நாளையும் வாக்காளர் அட்டை விநியோகப்பணியின் விசேட தினங்கள்
சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக இருப்பதனால் இவ்விருதினங்களையும் வாக்காளர் அட்டை விநியோகப்பணிகளின் விசேட தினங்களாக தபால் திணைக்களம் பிரகடனப்படுத்தி அதற்கு ஏற்றவகையில் தமது பணிகளை முடுக்கிவிட்டுள்ள்னர். மேலும் »
ஈழத்து ஏதிலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் – பா.ஜ.கட்சி
தமிழகத்திலுள்ள ஈழத்து ஏதிலிகளின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்யவேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன் இராதகிருஷ்னன் தெரிவித்துள்ளார். மேலும் »
நாங்கள் என்றும் கொள்கையில் உறுதியாக இருப்போம் – காந்தரூபன்
தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை ஓங்கி ஒலிக்கும் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் விலக மாட்டோம் எனவும், அதில் என்றும் உறுதியாக இருப்போம் எனவும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருக்கோணமலை வேட்பாளர் தங்கவேலாயுதம் காந்தரூபன் தெரிவித்துள்ளார். மேலும் »
தமிழீழ விடுதலைப் போராட்டம் நீதியற்று அழிக்கப்பட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் இந்திய அர்த்தம் புரியப்போவதில்லை!
'பாவத்தின் சம்பளம் மரணம்' என்கிறது கிறிஸ்தவம். 'இந்திய பாவத்தின் சம்பளம் பயங்கரவாதம்' என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் 'லக்சர் ஈ தொய்பா' ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார். மேலும் »
வாக்காளர்களை வசீகரிப்பதற்கான வேட்பாளர்களின் இலட்சார்ச்சனை
தேர்தல் நெருங்குகின்றது. வாக்காளப் பெரு மக்களைத்தம்பக்கம் இழுப்பதற்கான பல்வகை யுத்திகளை வேட்பாளர்கள் கையாள்கின்றனர். இதில் யாருடைய கருத்துக்களை வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை எதிர் வரும் 8ந் திகதிக்குப் பின்னரே சொல்ல முடியும். மேலும் »
உடைந்த சாவிகளும் பொருத்தமில்லாப் பூட்டகளும் – இதயச்சந்திரன்
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வின் திறவு கோல்கள் எங்கே இருக்கின்றன?சாவிகளைப் பல பேர் வைத்துள்ளனர். அதில் தம்மால் மட்டுமே முடியும் என்கின்றவாறு உடைந்த சாவிகளையும் சிலர் காண்பிக்கின்றனர். மேலும் »
சேர்பியா மீது மேற்குலகத்தின் உள்நுளைவு என்பது மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்தது – அருஷ்
மேற்குலகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுவிட்டால் அதனை புறம்தள்ள ஐ.நாவால் முடிவதில்லை. கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம் மேற்குலகத்தின் தலையீட்டால் தான் ஏற்பட்டது, அதற்கு பூகோள நலன்கள் காரணமாகியபோதும், கொசோவோ – சேர்பியா மீது மேற்குலகத்தின் உள்நுளைவு என்பது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருந்தது என படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசு வாரஏட்டுக்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் »
வடக்கில் நேரடியாக தலையிட இந்தியா முயற்சி
வடபகுதியில் தனது நேரடியான தலையீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
மக்கள் பாதுகாப்பு படை: தேர்தல் மோசடிகள் தொடர்பில் எதிர்கட்சிகளின் புது திட்டம்
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது ஏற்படும் மோசடிகளை தடுப்பதற்கு ஒரு இலட்சம் பேரை கொண்ட மக்கள் படையை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
சிறீலங்காவின் உளவியல் உறுதித்தன்மை சீர்குலைந்து வருகின்றது: பேராசிரியர் சானகா பெரேரா
பொருளாதார நெருக்கடி கரணமாக தென்னிலங்கையில் தாயார் ஒருவர் தனது பிள்ளையை படுகொலை செய்தது சிறீலங்காவின் உளவியல் உறுதித்தன்மை சீர்குலைந்து வருவதை எடுத்தக்காட்டுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை மூத்த பேராசிரியர் சானகா பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் »
இனப் பகையை வளர்த்துச் செல்லும் சிங்கள தேசத்தை எதிர்த்து மீண்டும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இப்போதும் தமிழீழம் உள்ளது!
எம்மால் முடியுமா? என்ற கேள்வியைப் பரிசீலிப்பதற்கு முன்பாகவே எம்மில் சிலர் முடியாது என்ற முடிவுக்கே வந்துவிடுகின்றார்கள். முடியுமா? என்ற சந்தேகத்திற்கு, பலவீனமான பலரின் பதில்களும் அதுவாகத்தான் இருக்கும். அந்தப் பலவீனமான நினைவுகளும் முடிவுகளும்தான் உலகில் தமிழர்களுக்கென்ற ஒர நாடுகூட இல்லாத அவலத்தைத் தோற்றுவித்தள்ளது. மேலும் »
சாவகச்சேரியில் மாணவன் சடலமாக மீட்பு
யாழ்பாணம் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த கபில்நாதன் என்ற பாடசாலை மாணவன் சிலதினங்களுக்கு முன்னர் காணமல் போயிருந்தார். இவரது சடலம் இன்று பிற்பகல் சாவகச்சேரி நீதவான் டி.பிரபாகர் முன்னிலையில் வீடொன்றின் பின்புறம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் »
சிறிலங்கா வந்து மகிந்தவை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை
சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்த இந்திய கிரிக்கட் அணியைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு எதிராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரைத் தாக்க முயற்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹென்றி என அழைக்கப்படும் குலசேகரம் மகேந்திரனை, சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணைப்படைக் குழுவான (கருணா குழு) இனியபாரதி குழுவினர் தாக்க முற்பட்டுள்ளனர். மேலும் »
மாவீரர்களின் எலும்புக்கூடுகளையும், வரிப்புலிச் சீருடைகளையும் காட்டுமிராண்டித்தனமாக தோண்டியெடுத்து வீதியில் கொட்டும் சிங்கள காடையர்கள்
அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள், தமிழர் வரலாற்று சான்றுகள், தமிழர் கலாச்சார நினைவு சான்றுகள் என அனைத்தையும் அழிப்பதில் மிகக்கவனமாக துரித கெதியில் சிங்கள பேரினவாத அரசு செயற்பட்டு வருகிறது. மேலும் »
மற்றுமொரு மியன்மாராக இலங்கை மாறுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்: முன்னாள் பிரதம நீதியரசர்
மற்றுமொரு மியன்மாராக இலங்கை மாறுவதனை தடுப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கேட்டுக்கொண்டார். அனுராதபுரத்தில் புத்திஜீவிகளுடன் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் »
தேசியத் தலைவர் நிராகரித்த ஒஸ்லோ தீர்வை ஏற்பதா? – கெளரிமுகுந்தன்
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நிராகரித்த ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலான தீர்வு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் தற்பொழுது முன்வைத்து வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை நகர சபையின் தலைவரும், மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் »
ஜப்பான் சிறிலங்காவுக்கு நிதியுதவி
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப்பணிகளுக்காக ஜப்பான் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதன்படி 46 பில்லியன் ரூபாயினை இலங்கைக்கு நிதியுதவியா வழங்க தமது நாடு தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் »
வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையங்களில் பணியாற்ற கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி
நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் »
No comments:
Post a Comment