கேள்விக்குறியான எமது இனம்: புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு
சீனா, ரஷ்யாவின் ஆயுத பலத்துடனும் இந்தியாவின் இராணுவ தொழில் நுட்ப உதவிகளுடனும் தமிழீழத்தில் உள்ள தமிழினத்தை இனச்சுத்திகரிப்பு செய்த இலங்கை அரசாங்கம் இன்று தாம் யுத்தத்தில் வெற்றி பெற்றதாகவும் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாகவும் இலங்கையின் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் தென்னிலங்கையில் பட்டாசு சந்தோசத்துக்காகவும் வட இலங்கையில் பட்டாசு தமிழினழிப்புக்கும் சிங்கள வெறியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!!
இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன?
அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான்
நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம் யுத்தம் முடிந்த உடனேயே
தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது
தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை
வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியில் சிக்குண்டுள்ள ஈழத் தமிழினம்
இலங்கையில் 48 மணி நேர காலக்கெடு முடிவடைந்து, இன்னமும் யுத்தம் தொடர்கிறது. வருடங்கள் மாதங்களாகி, மாதங்கள் வாரங்களாகி, இன்று வாரங்கள் மணித்தியாலங்களாக மாறியும் போர் முற்றுப் பெறவில்லை. நூறாகி நின்ற உயிரிழப்புக்கள் ஆயிரமாகியதே தவிர, வடக்கில் வசந்தம் வீசுவதற்குரிய அறிகுறிகள் தென்படவில்லை.
நமக்காக நாம் என்ற போராட்டத்தை ஆரம்பித்து, இழந்தவற்றை மீட்க வேண்டும்: மலையகத்திலிருந்து ஒரு குரல்
பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்களுக்கு விடிவு ஒன்று கிடைக்கும், உலக நாடுகளும், இந்தியாவும் எம் மக்களுக்கு துணை புரியும் என்று நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் வெறும் அறிக்கைகளை மாத்திரமே விடுத்து, எங்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி, இன்றுவரையில் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
அம்பலமாகும் இந்தியப் பங்களிப்பு: உதயன்(ஆசிரியர் தலையங்கம்)
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் இலங்கைப் படைகளின் கைகள் ஓங்குவதற்கு யார் காரணம் என்ற குட்டைப் போட்டு உடைத்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
"குற்றவாளி"
ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடார்பாக தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனமும் புதுடில்லி ஆட்சியாளர்களின் தமிழ்நாட்டு மக்கள் மீதான ஏளனமும் தொடர்பாக அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா.
அவலம் நிறைந்த அகதி வாழ்வு தொடருமா?…
அகதி முகாம் வாழ்க்கை என்பது தமிழினத்திற்கே சொந்தமான இன்னுமொரு வாழ்க்கை முறையா? என்ற கேள்வி தற்போது சகல தமிழனது மனதிலும் எழுந்துள்ளது.
படைநகர்வுகளை தாமதப்படுத்தும் அடுக்கடுக்கான மண் அரண்கள்
வெறும் 5 சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான பிரதேசத்திற்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் புலிகளும் முடங்கிப் போயிருக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றும் படை நடவடிக்கை இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தியா சிறிலங்காவிற்கு அளித்த இராணுவ உதவிகளைப் பாரீர்!
நம் இனத்தை இப்படிக் கொன்றதும் அழித்ததும் யார்? கொத்துக் கொத்தாக நம் குழந்தைகள் ஈழத்தில் செத்து விழுகின்றன! உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளையும் நச்சு வாயுக் குண்டுகளையும் தமிழர் வாழும் இடங்கள் மீது வீசுகிறார்கள்.
இந்திய அரசின் மெளனமும் அதன் மறுதலையான செயற்பாடுகளும்: தாயகத்திலிருந்து கா.வே. கரிகாலன்
ஈழத்தமிழர்கள் திட்டமிட்டு இந்திய, ஸ்ரீலங்கா கூட்டுப்படைகளால் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர் ஈழத்து உறவுகளும் இரவு பகலாகப் போராட்டங்களை முன்னெடுத்து விடுத்த கோரிக்கைகளுக்கு இந்திய அரசின் மெளனமும் அதன் மறுதலையான செயற்பாடுகளும் அவர்களின் உண்மையான முகத்தினை இன்னும் வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றது.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
No comments:
Post a Comment