Monday, November 2, 2009

ஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் – கொளத்தூர் மணி

யாழ் வாழ் மாக்களுக்கு… (ஒரு புலம்பெயர் ஈழத்தமிழன்)

பெரும் சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட இனம் தமிழினம். உலகின் மூத்த குடிகளில் ஒன்று தமிழினம். தனிப் பெரும் கலாச்சாரமும். தனித்துவமும் கொண்ட பேரினம் தமிழினம். ஆனால் வேறெவ்வினமும் காணாத பெருவீழ்ச்சி கண்டதுவும் தமிழினம் தான். ஏன்? எதனால்? சத்தியமாக இதற்கு வேற்றினத்தவன் காரணமல்ல, தமிழினம் வீழ ஒவ்வொரு தமிழனும் காரணம்.

நட. நட.. எதிரிகள் விழ. விழ.. தமிழினம் விடுதலை பெற நட! – சுவிசிலிருந்து தொல்காப்பியன்

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை.

சிறீலங்கா அரசின் படைத்துறை பலப்படுத்தல்களின் நோக்கம் என்ன? – வேல்ஸ்லிருந்து அருஷ்

விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் விடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் போர் நிறைவுபெற்ற பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் போருக்கு பின்னரான அபிவிருத்திகளோ அல்லது பாதுகாப்பு தளர்வுகளோ  பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.

'குற்றம் சாட்டுகிறேன்' – இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் வைகோவின் ஆவணம்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் – வைகோ நேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு 'குற்றம் சாட்டுகிறேன்' எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.  நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது.

ராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இரு தசாப்தங்களுக்கு காப்பாற்றியது – வேல்ஸிலிருந்து அருஷ்

"சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஓர் அடிப்படை விளக்கம் – கிஷ்ணன்

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதியில் உள்ள பண்ணாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று அழைக்கப்படுகின்றது.

தமிழர்கள் மீண்டுமொருமுறை ஆணை வழங்கவேண்டிய சந்தர்ப்பம்

புலம்பெயர்வாழ் தமிழர்களே! உங்களுக்கு சொல்லுகின்றோம். தற்போது இடம் நடைபெறப்போகும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழர்களாகிய நாம் இந்த தேர்தலை எப்படி முகம்கொடுக்கப்போகின்றோம் என்பதைபற்றி பலதரப்பிலிருந்தும் பலவாறான கருத்துக்கள் நிலவிவருகின்ற இன்றைய சூழலில், ஓர் தீர்க்கமான முடிவினை அனைவரும் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

வரதராஜப்பெருமாள், தயவுசெய்து வராதே ராஜப்பெருமாள – ரோஜா ரஹ்மான்

அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். இந்திய இராணுவம் எமது மண்ணில் கால்பதித்த ஆரம்பக்காலம். வன்னிமண்ணின், ஒரு அழகான கிராமம்தான் எனது இருப்பிடம்.

காக்கத் தவறினோம்! கழுவாய் தேடுவோம்!! – பழ. நெடுமாறன்

உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு.

ஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் – கொளத்தூர் மணி

ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்கு முன்னால், இதுவரை, நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈழம் என்ற சொல், கடந்த காலங்களில் ஒட்டு மொத்த இலங்கையைக் குறிக்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந் தாலும், இப்போது அது தமிழர்களின் தமிழர் தாயகத்தைக் குறிப்பதற்கான சொல்லாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment