Monday, November 2, 2009

தமிழ்த் தேசியத்தின் அபிலாசைகள்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: நாடு கடந்த அரசாங்கம்: ஓர் ஆய்வு – தமிழ்நெற்

தமிழ்த் தேசியத்தின் அபிலாசைகள்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: நாடு கடந்த அரசாங்கம்: ஓர் ஆய்வு – தமிழ்நெற்

தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக தம்மைக் கூறுகின்ற தமிழர் தேசியக் கூட்டணி அல்லது பிற அரசியல் கட்சிகள் என்பன இந்தியாவை அல்லது மகிந்த ராஜபக்சாவை அல்லது எந்தவொரு அதிகார வர்க்கத்தையும் திருப்திப்படுத்துவதற்காக மக்களின் இந்த ஆணையிலிருந்து விலகிவிட்டதாக வெளிப்படையாகக் கூற உரிமை அற்றவர்கள் என தமிழநெற் இணையத்தளம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சதிவலை! – தினமணி ஆசிரியர் தலையங்கம்

கடந்த புதன்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கிளம்பிய 543 மீன்பிடிக்கும் விசைப் படகுகளில் 538-தான் வியாழனன்று ராமேஸ்வரம் திரும்பி இருக்கிறது. ஐந்து படகுகளை இலங்கையில் கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததுடன் நில்லாமல் அதிலிருந்த மீனவர்களையும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். 

தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார்? – ஈழநாடு ஆசிரியர் தலையங்கம்

பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஜி.ரிவி. நேரடி நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

சிறிலங்கா போரில் வென்றாலும் சமாதானத்தை தொலைத்து விட்டது: த எக்ஸாமினர் இணையத்தளம்

1945ம் ஆண்டு ஜேர்மனி, ஏலியஸ் படையினரிடம் சரணடைந்தன் பின்னர், 'யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், சமாதானத்தை தோற்றுவிட்டோம்" என்ற வின்சனட் சேர்ச்சிலின் கருத்துப்படியே சிறிலங்கா அரசாங்கத்துக்கும் நிகழ்ந்திருப்பதாக த எக்ஸாமினர் என்ற ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது.

எங்களுக்கான போர்க் களம் திறந்தே உள்ளது

மீண்டும் ஒரு யுத்த களம் நோக்கி அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை.

இலங்கையில் மீண்டும் ஒரு போராட்ட இயக்கம் மலரும் – கார்டியன்

இலங்கையில் ராணுவ வெற்றி ஏற்பட்டதன் பின் சில மாதங்களாகியும் அங்கு வேறுபாடுகளைக் களைந்து சமரசம் உருவாகுவதற்கான சூழலுக்கு கடுகளவு பெருந்தன்மையே உள்ளது என்றும் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் முள்ளுக் கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ள பிரிட்டன் கார்டியன் பத்திரிகை, இரு நாட்களில் வெளியிடப்பட்டுள்ள தனது இரண்டாவது கட்டுரையில், இவையெல்லாம் மீண்டும் ஒரு விடுதலை இயக்கத்தை தமிழர்கள் தோற்றுவிப்பதற்கான வித்து எனக் கூறியுள்ளது.

மேற்குலகின் மாற்றங்களினூடாகப் பயணித்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும்: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை ஆசிரியர்

Posted Under: கட்டுரைகள்
பகலவன்

இலங்கைத் தீவில் தமிழினப் படுகொலை ஒன்று அரங்கேறுவதற்குத் துணை நின்ற சக்திகள், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான இலங்கையின் அணுகுமுறையால் வெகுவாகக் குழம்பிப் போயுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும் – வே. மதிமாறன்

Posted Under: கட்டுரைகள், செய்திகள்
வன்னியன்

ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் 'தமிழணர்வு' கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது.

விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்?

முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

சிறிலங்கா – மேற்குலக பனிப்போர் தமிழருக்கு விடிவைத் தருமா?

Posted Under: கட்டுரைகள், செய்திகள்
வன்னியன்

விடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை அரசுக்கு மறைமுகமாகத் துணை நின்ற மேற்குலக நாடுகள், இப்போது அதற்கு எதிராகத் திரும்ப ஆரம்பித்துள்ளன.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment