Monday, November 2, 2009

மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

தமிழன் துன்புறுவதை கணிக்க, தெலுங்கு தலைமையில் இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற குழு

வவுனியா அகதிகள் முகாமில் தங்கி துன்புற்று மனித வதைக்கு உட்பட்டுள்ள வன்னி மக்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தியத் தூதுக்குழு ஐந்து நாள் பயணமாக இன்று நண்பகல் கொழும்புக்கு செல்லவுள்ளனர்.

வன்னி மக்களின் அவலக் குரல் உங்கள் உணர்வுகளைத் தொடவில்லையா?

நாங்கள் இங்கு இறக்கப் போகின்றோம். அதற்கு முன்பாக எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று கதறி அழும் வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் உறவுகளின் அவலக் குரல்கள் எங்களுக்குக் கேட்கிறதோ, இல்லையோ உலகின் மனச்சாட்சியை உருக வைத்துள்ளது.

மகிந்த நிலத்தில் மண்டியிட்டு முத்தம் கொடுத்ததின் மாயம்

கடந்த மே மாதம் 17ம் திகதி காலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த மகிந்த, விமானத்தில் இருந்து இறங்கியதும் மண்ணைத் தொட்டு முத்தமிட்ட விடையம் யாவரும் அறிந்ததே. யுத்தம் முடிவடைந்ததாகக் குறிப்பிட்டு மகிந்த மண்ணை முத்தமிட்டிருந்தார். இருப்பினும் மே 18ம் திகதியே யுத்தம் முழுமையாக நிறைவடைந்தது என்பது பலரும் அறிந்த உண்மை. இதனிடையே என்ன நடந்தது?

போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக தொடரும் சித்திரவதைகள்: ஆனந்த விகடன்

இலங்கையை ஆள்வோர் 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்திரவதைகளைத் தொடர்கிறார்கள்! இவ்வாறு இந்திய தமிழ் சஞ்சிகையான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.

உலகத்தின் இரத்த வேட்கை: தீவிரவாதத்தின் பெயரால் – வெ. தனஞ்செயன்

"இறப்பின் வலிமையை விட கொடியது, இழப்பிற்குப் பின் ஆறுதல் கூறுவதற்கு ஆளில்லா தனிமை" அந்தக் கொடுமையை இன்று ஈழத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

Posted Under: கட்டுரைகள், செய்திகள்
வன்னியன்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், "அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.

இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்

ஈழவிடுதலை வரலாற்றில் திலீபன் ஒரு திருப்பு முனை. 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன.

தடைக்கல்லாக மாறுகின்றதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? – பாரிஸ் ஈழநாடு

கடந்த செப்ரம்பர் 7-ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த விடயமானது, புலம் பெயர் தேசத்துத் தமிழர்கள் இதுவரை நடாத்திவந்த தொடர் போராட்டத் தியாகம் வீணாகிப் போய்விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

கண்பறித்துக் காட்சிகொடுக்கும் சர்வதேசம்

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் "ஆழிப் பேரலை" என்னும் இயற்கையின் கோரப் பசிக்கு ஆயிரக் கணக்கில் மனித உயிர்கள் பறிக்கப்பட்டபோது, அந்த இயற்கையின் சீற்றத்துக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத நிலையில் மனிதகுலம் அலறித்துடித்தது!

புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது! : பாரிஸ் ஈழநாடு

புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது. எங்கள் மக்களுக்காகவும், எங்கள் மண்ணுக்காகவும் நாங்கள் கொண்ட போர்க்கோலம் தமிழீழம் மலரும்வரை தொடரும். இவ்வாறு பரிஸிலிருந்து வெளிவரும் இன்றய ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment