
மகிந்தாவின் தேர்தல் முடிவுகளைக் கேட்டவுடன், பல தமிழ் ஆர்வலர்களுக்கு மேற்கூறப்பட்ட பழைய திரைப்படப்பாட்டு ஞாபகத்தில் வரலாம். மகிந்தாவின் மகத்தான வெற்றி பல தமிழ் மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்க முடியாது. "பழைய கறுப்பன் கறுப்பன்தான்" என்ற வகையில், சிங்களத் தேசத்தின் மக்கள் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்தையும் இனஅழிப்பையும் மேற்கொண்ட ஒரு தலைமையைத் தெட்டந்தெளிவாக ஏற்றியிருக்கின்றனர்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற அமைந்துள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு'ம், மக்கள் பேரவையும் இணை பிரியாத இரு படை அணிகளாகவே பயணிக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் அவாவாக உள்ளது. இதுவே திரு உருத்திரகுமார் அவர்களது இலட்சியமாகவும் உள்ளது.
No comments:
Post a Comment